1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lockdown violation rs 5.74 crore collected as fine

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.5.75 கோடி அபராதம் வசூல்

காவல்துறை
ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் ரூ.5.75 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.    
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4.78 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 3.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5.75 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash