1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 9 மே 2020 (16:02 IST)

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சென்னை காவல்துறை எல்லைக்க்கு உட்பட்ட பகுதிகளில்,. காலை  6 மணி முதல் இரவு 7 மணி வரை  அத்தியாவசிய பொருட்களான காற்கறிகள், மளிகைப் பொருட்கள், விற்[அனை  செய்யும் கடைகள்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற தனிக்கடைகள் காலை 10:30 மனி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.