1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. lockdown extension for one more week Permission for vegetable shops

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு? காய்கறி பழக்கடைகளுக்கு அனுமதி!

lockdown extension
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தளர்வுகள் இல்லா ஊரடங்கை அறிவித்து மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் உடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடிக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
 
அதில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவெடுத்துள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் காய்கறி, பழ கடைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!