திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (09:42 IST)

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை!

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவி தேர்தலில் 4 இடங்களில் திமுக முன்னிலையில் இருப்பதாகவும், 2 இடங்களில் அதிமுக முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்
 
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 2 இடங்களிலும் அதிமுக 1 இடத்திலும்  முன்னிலை!
 
திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு. மேலும் தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது