செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (09:12 IST)

அதிகாரிகள் குளறுபடியால் வாக்கு எண்ணிக்கை தாமதம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

தமிழகத்தில் இன்று உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகள் குளறுபடியால் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாத‌தால் வாக்கு எண்ணிக்கை தாம‌தமாகி வருவதாகவும், செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாம‌தமாகி வருவதாகவும், புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாகவும், மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வர தாமதம் ஆனதால் வாக்கு எண்ணிக்கை தாம‌தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் பழனியில் முகவர்கள் வராததால், வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை முன்பு அதிகாரிகள் காத்திருப்பதாகவும்,  திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அதிகாரிகளிடம் திமுகவினர் முறையீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்த அறைக்கு செல்வது? வாக்கு சீட்டுகளை எப்படி பிரிப்பது? அவற்றை எப்படி எண்ணுவது? என்று முறையாக பணியாளர்களுக்கு பயிற்சி இல்லாததால் தேர்தல் பணியாளர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.