1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (21:39 IST)

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல்: 6 முனை போட்டியா?

தமிழகத்தில் ஒன்பது ஊராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் ஊராட்சி தேர்தலில் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாமக, மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
 
இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் 6 முனை போட்டியை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டுமே கடுமையான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது