செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (17:26 IST)

ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் வைக்கப்பட்ட கல்வெட்டு! – வைரலாகும் புகைப்படம்!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமை செயலகம் என்ற கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 திமுக ஆட்சியின்போது தமிழக தலைமை செயலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கட்டிடம் ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றப்பட்டதுடன் அங்கிருந்த புதிய தலைமை செயலகம் என்ற கல்வெட்டும் அகற்றப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் புதிய தலைமை செயலம் என முன்னர் இருந்த அந்த கல்வெட்டு மீண்டும் ஓமந்தூரார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.