1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (20:21 IST)

தமிழகத்தில் நிரந்தரமாக நம் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதை அடுத்து 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் இனி விடியல் பிறக்க போகிறது என்றும் தமிழகத்தில் நிரந்தரமாக நம்ம ஆட்சிதான் நிகழ்ந்திட வேண்டும் என்றும் அதற்காக நான் பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்கள் மேலும் பேசியபோது உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்காக திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்