1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (09:45 IST)

நாளை ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்கும்!

சென்னையில் அத்தியவசிய பணிகளுக்கு மக்கள் செல்வதற்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், சென்னையில் அத்தியவசிய பணிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஏதுவாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரயில் சேவைகளும், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 60 சேவைகளும், கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 சேவைகளும், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 120 சேவைகளும் இயக்கப்பட உள்ளது.