1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 547 Vehicles ceased in Chennai

ஊரடங்கில் தடையை மீறி சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்கு
சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 
சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்காக 10,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர். சென்னையில் 449 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். 
 
ஊரடங்கு சமயத்தில் ,பெட்ரோல் பங்க்கள், பால் விநியோகம், பத்திரிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்ரோக்கள், 14 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மருத்துவப் படிப்பில் 27% ஓ.பி.சி. இடஒதுக்கீடு செல்லும்! - உச்ச நீதிமன்றம்