புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:13 IST)

லேப்டாப்பில் கடத்தி வந்த ரூ.34.38 லட்சம் மதிப்புள்ள தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த இருவர் லேப்டாப்பில் இருந்து தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
லேப்டாப்பில் தங்க செயின் மற்றும் தங்க பொருட்களை மறைத்து வைத்து நடத்தப்பட்டதாகவும் இந்த தங்கத்தின் மதிப்பு உற்பத்தி ரூ.34.38 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ஒரு சில பொருள்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.