வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2019 (14:56 IST)

உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக சார்பில் போட்டியிட நவ., 15, 16 ல் விருப்ப மனு !

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போடியிட விரும்புவோர் நவம்பர் 15,, 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்டம் தலைமை அலுவலகங்களில்  விருப்ப மனு பெறலாம்,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுக மாவட்ட தலைமையகத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போடியிட விரும்புவோர் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெறலாம்.
 
ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 3, 000 விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும்.
 
மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ. 5, 000 செலுத்த வேண்டும்.
 
பேரூராட்சி தலைவர் பதவி ரூ.5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ. 1,500 விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும்.
 
நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி ரூ.  2,500 விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும்.
 
மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ. 25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ; 5,000 விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும். என தெரிவித்துள்ளது.