1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Light Metro scheme is chennai important place

சென்னையின் முக்கிய பகுதிகளில் லைட் மெட்ரோ திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு,.!

சென்னை
சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக இயங்கி வரும் நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னை பெருநகர புதிய போக்குவரத்து திட்டத்தில் லைட் மெட்ரோ திட்டம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது 
 
பொதுமக்கள் அதிகம் கூடும் அண்ணாநகர், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 2.5 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.
 
கருத்துக்களை கேட்ட பின்னர் எந்தெந்த பகுதியில் லைட் மெட்ரோ அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட பிறப்பித்த உத்தரவு: ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!