ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (19:07 IST)

ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் மூக்கை உடைத்த மாணவன்

teacher
சென்னை திருவொற்றியூரில் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறையில்  மாவா போட்டுத் துப்பியுள்ளான்.

இதுபற்றி, ஆசிரியர் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்  பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வகுப்பறையில் மாவா போட்டு துப்பியதைப் பற்றி ஆசிரியர் தலைமையாசிரியரிடமும், பெற்றோரிடமும் புகார் அளித்த ஆத்திரத்தில் மாணவன் ஆசிரியை தாக்கியுள்ளார்.

இதில், ஆசிரியர் சேகரின் மூக்கு உடைந்த நிலையில், அவர் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.