”தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது”.. பிரச்சாரத்தில் முழங்கிய ஸ்டாலின்

Arun Prasath| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (18:47 IST)
8 ஆண்டுகாலத்தில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது என முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன்  பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளரான நா.புகழேந்தியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள், குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பரப்புரையில் பேசத் தயாரா?? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :