1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (12:09 IST)

பாதியாக குறைந்த பாடங்கள்: கொரோனாவால் மாணவர்கள் ஹேப்பி!!

கொரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டது. 
 
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து இன்னும் பள்ளி திறக்கப்படவேண்டிய நாள் குறித்து முடிவு செய்யப்படவில்லை. எனவே, கொரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 
 
இதனை ஏற்று தற்போது 10 ஆம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியலுக்கு ஒரே புத்தகமகாவும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.