1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:50 IST)

நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மசோதாவால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மசோதாவை தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்பதும் பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சட்ட மசோதாவால் மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நீட் தேர்வை எதிர்த்து ஒரே ஒரு மாநிலம் மட்டும் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வதால் எந்தப் பலனும் இல்லை என்றும் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்து திமுகவால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.