வேட்புமனுவை திரும்பப் பெற இன்றுதான் கடைசி நாள்!
தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 9 மாவட்டங்களுக்கு நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
இதனை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றுதான் கடைசி நாள். அதனால் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படும்.