1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lalitha Jewellery News

லலிதா ஜூவல்லரி செய்திகள்

Lalitha Jewellery
தேர்தல் நேரத்தில் திடீர் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்வது வழக்கமான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை டாப்ஸி மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தது என்பது தெரிந்ததே 
 
இதன் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி லலிதா ஜுவல்லரி கடைகளில் ரெய்டு நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து லலிதா ஜுவல்லரி விற்பனை நிலையங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த சோதனைக்கு பின்னர் இது வாடிக்கையான வருமான வரித்துறை சோதனை என்றும், இதில் எந்த விதமான வரி ஏய்ப்பு குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜுவல்லரி சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
About Writer
siva