திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (15:12 IST)

தாஜ்மஹாலுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

இந்தியாவில் முன்னணி சுற்றுலாதளமான தாஜ்மஹாலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முன்னணி சுற்றுதளங்களில் தாஜ்மஹால் முக்கியமான ஒன்றாகும். டெல்லியில் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தாஜ்மஹாலில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக மர்ம போன் கால் ஆக்ரா போலீஸாருக்கு வந்துள்ளது.

இதனால் உடனடியாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் மத்திய பாதுகாப்பு படையினர் வெடிக்குண்டு நிபுணர்களுடன் தாஜ்மஹால் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். வெடிப்பொருட்கள் எதுவும் சிக்காவிட்டாலும் தாஜ்மஹாலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.