டிக் டாக்கில் விஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி:பெரம்பலூரில் பரபரப்பு

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (13:53 IST)
பெரம்பலூர் அருகே தனது கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் பலியான செய்தி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற செய்லிகளின் வரிசையில் தற்போது  இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ளது டிக் டாக் என்ற செயலி.

டிக்-டாக்கில் ஆண்களை விடவும் பெண்களே அதிகமாக வீடியோக்களை வெளியிடுகிறார்கள் என்றும், மேலும் அதிக ஆபாசமாகவும் பல கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து நடனமாடும் வீடியோக்களும் அதிகமாக பதிவேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இந்நிலையில் பெரம்பலூர் அருகே சீராநத்தம் என்ற கிராமத்தில் அனிதா என்ற பெண் தனது கணவர் திட்டியதால் டிக்-டாக்கில் விஷம் குடிப்பது போல் வெளியான வீடியோ பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து வெளியான செய்தியில் அனிதாவின் கணவர் பழனிவேலு வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும்,அனிதா தனது குழந்தையுடன் தனது கணவர் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அனிதா தனது மொபைலில் டிக்-டாக் செயலியை அதிகமாக பயன்படுத்தி வந்ததாகவும், இதனை அறிந்த அனிதாவின் கணவர் பழனிவேலு அனிதாவை கடுமையாக கண்டித்து உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் அனிதா சில  நாட்களுக்கு முன்பு மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துளார். பின்பு அதனை விடியோ எடுத்து டிக்-டாக்கிலும் பகிர்ந்துள்ளார்.

பூச்சி மருந்தை குடித்த சில நிமிடங்களில் அவரது கண்கள் மயக்க நிலையை அடைந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனிதாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதன்பின்பு மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் பெரம்பலூர் சீராநத்தம் கிராமப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனிதாவின் டிக்-டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :