வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (16:31 IST)

ஓடும் காரிலிருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் – பதறவைக்கும் வீடியோ

கோயம்புத்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து தனது மனைவியையே கணவன் தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியது.

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆர்த்தி. இவரை சில வருடங்களுக்கு முன் அருண் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அருணின் பெற்றோரும் ஆர்த்தியை மோசமாக நடத்தி வந்திருக்கின்றனர்.

பொறுமையிழந்த ஆர்த்தி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கே வந்து மன்னிப்பு கேட்டு மறுபடியும் வீட்டிற்கு அழைத்து போயிருக்கிறார் அருண். சிறிதுநாள் கழித்து வழக்கம் போல அருணும், அவரது பெற்றோரும் ஆர்த்தியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆர்த்தி ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அருணை விசாரித்த போலீஸார் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்தக்கூடாது என எழுதி வாங்கி கொண்டு இருவருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி அருண் தனது மனைவி ஆர்த்தி மற்றும் பெற்றோருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த அருண், ஆர்த்தியை கார் போய் கொண்டிருக்கும்போதே கதவை திறந்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்திலுள்ளோர் ஓடிவந்து ஆர்த்தியை காப்பாற்றினர்.

அவரை காரிலிருந்து தள்ளிவிட்ட சிசிடிவி வீடியோவை பலரும் அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நன்றி: NDTV