1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kushboo condemns about Periyar Statue disrespect

பெரியாருக்கு காவி பூசுவது கோழைத்தனம்: குஷ்பூ கண்டனம்

கோவை
கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் வேலை கண்டிக்கத்தக்கது. அது கோழைகளின் செயல் என குறிப்பிட்டுள்ளார்.