தொடர்புடைய செய்திகள்
- நடிகை குஷ்பூ ட்விட்டர் கணக்கு ஹேக்கிங்..??! – அனைத்து பதிவுகளும் நீக்கம்!
- தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு குழப்பம் விளைவிக்கின்றார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்
- எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கதது... தனுஷ் புது சாதனை!!
- ஊடகங்களில் செய்தி பதிவுகள் நீக்கம்!?; கோரிக்கை விடுத்த இந்தியா! – ட்விட்டர் தகவல்!
- அஜித், விஜய் ரசிகர்களிடையே டுவிட்டரில் மோதல்…
அமெரிக்காவில் இருந்து ஹேக் - குஷ்பூ பரபரப்பு புகார்!
அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக குஷ்பூ புகார் அளித்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகையான குஷ்பூ முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரது ட்விட்டர் கணக்கில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கி பெயரை மாற்றியதுடன், அதில் இருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளனர். இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என்ற விவரங்கள் தெரியது இருந்த நிலையில் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தனது ட்விட்டர் கணக்கை கடந்த 3 நாட்களாக பயன்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஷ்பூ சென்னை டிஜிபி அலுவலகத்திலும் சைபர் க்ரைம் காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். மேலும் இவ்வாறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டியுள்ளார்.
