ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (17:05 IST)

அஜித், விஜய் ரசிகர்களிடையே டுவிட்டரில் மோதல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இதை பலமுறை விஜய், அஜித் இருவரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இருவரின் ரசிகர்களும் அவர்களின் படம் வெளியாகும் போதும், அப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது ஒருவர் மற்றவரை விமர்சித்து கருத்துகள் பதிவிடுவது, டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.

அந்தவகையில், சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து, இன்று அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்துள்ளனர். இதற்கு எதிரான  #kadanaiadainganaajith என்ற பெயரிலும், #wesupportThalapathyvijay என்ற பெயரிலும் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்துள்ளனர்.