ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூலை 2021 (15:35 IST)

தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு குழப்பம் விளைவிக்கின்றார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தடுப்பூசி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை சைதாப்பேட்டையை எடுத்து சின்ன மலை பகுதியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசும் போது இதனை அவர் கூறினார். தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதன் அவசியத்தை விளக்கிய அமைச்சர் சுப்பிரமணியன், கடந்த ஆட்சியில் வீணடிக்கப்பட்ட அளவையும் சமன் செய்யும் வகையில் திமுக ஆட்சியில் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக கூறினார் 
 
புள்ளி விவரத்தை வெளியிட தயார் எனக் கூறிய அமைச்சர் சுப்ரமணியன் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை மத்தியஅமைச்சரே பாராட்டி இருக்கும் விவரம் அறியாமல் எடப்பாடி பழனிசாமி, குஷ்பு ஆகியோர் பொய்க்குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
முன்னதாக தமிழக அரசு ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை வீணாக்கியதாக குஷ்பூ குற்றம் சாட்டி இருந்தார் என்பதும், இதே குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது