வேணும்னு பேசல... தவறான வார்த்தைக்காக மன்னிப்பு கோரிய குஷ்பு !
மாற்றுத்திறனாளிகள் குறித்த விமர்சனத்திற்கு பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். குஷ்புவின் இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று குஷ்பு விமர்சித்தார். இந்நிலையில் குஷ்புவின் பேச்சு மாற்றுத்திறனாளிகளை சிறுமைப்படுத்துவது போல உள்ளது என மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புக் கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன்.
எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன் என கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.