திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (14:09 IST)

குஷ்பு திறமையானவர்... பொன்னார் புகழாரம்!

குஷ்பு பாஜகவில் இணைந்ததற்கு பாஜகவினர் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மாறிய விவகாரத்தில் குஷ்பு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்ததற்கு பாஜகவினர் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அந்த வகையில், குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க கூடிய திறமை மிக்கவர் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.