தொடர்புடைய செய்திகள்
- குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு
- இன்று ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு: குரங்கணி பலி 20ஆக உயர்ந்தது.
- குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு
- செங்கல்பட்டு அருகே தீவிபத்து; புகைமூட்டமான நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு
- தீக்குளிக்க முயன்ற 2 காவலர்கள் குறித்து தேனி எஸ்பி அளித்த திடுக்கிடும் தகவல்கள்
குரங்கணி தீவிபத்து: பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகிய நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒவ்வொருவராக மரணம் அடைந்ததால் நேற்று வரை பலி எண்ணிக்கை 21ஆக இருந்தது
இந்த நிலையில் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக இன்று உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 26 வயது சிவசங்கரி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த விபத்தில் காயம் அடைந்த இன்னும் ஒருசிலர் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவர்கள் குணமடைந்து வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அடுத்த கட்டுரையில்
