திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (16:05 IST)

செங்கல்பட்டு அருகே தீவிபத்து; புகைமூட்டமான நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு

செங்கலபட்டு அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை புகை மூட்டம்  அதிகமாகி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதானல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை புகை மூட்டமாக காணப்பட்டது. 
 
புகை மூட்டம் ஏற்பட்ட காரணத்தால் சாலை வாகனங்கள் செல்வது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் இந்த காட்டுத்தீ வெயிலில் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.