நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி... இனிப்பு வழங்கிய பாஜக வழக்கறிஞர் அணி
*கரூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.*
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அந்த அணியின் மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில், தாந்தோணிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்கள் வாயிற்கதவு முன்பு பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.