திங்கள், 20 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified திங்கள், 19 செப்டம்பர் 2022 (12:20 IST)

10ல் போட்டி 5ல் வெற்றி: 2024 தேர்தலில் பாஜகவின் வியூகம்!

BJP
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் அதில் குறைந்தது ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழக பாஜகவுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை கூட்டணி என்றால் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தலைமை அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் பாஜகவுக்கு எதிர் திமுக தான் என்ற மாயையை உருவாக்க வேண்டும் என்றும் அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பாஜக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
மொத்தத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் கணக்கு பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.