செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (09:19 IST)

வேகமாக நிரம்பும் ஏரிகள்; எப்போ வேணாலும் திறக்கப்படலாம்! – மக்கள் பீதி!

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முழு கொள்ளளவை எட்டியதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பின்னர் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் என 67க்கும் அதிகமான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.