செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:51 IST)

சோனியா காந்தி ராஜினாமா செய்தி குறித்து கேஎஸ் அழகிரி கருத்து: தமிழகத்தில் காங்கிரஸில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி திடீரென அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் இந்த ராஜினாமா நாளை நடக்க இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் சோனியா காந்திக்கு பதிலாக புதிய காங்கிரஸ் தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் புதிய காங்கிரஸ் தலைவர் பட்டியலில் ப சிதம்பரம் உள்பட பல மூத்த தலைவர்கள் பெயர் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது ’அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராக தொடரவேண்டும் கோடிக்கணக்கான இந்திய மக்களும் காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்கள் சோனியா ராகுலை பின்பற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்