சரத்பவார் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த கொரோனா வைரஸால் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்புறம் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அந்த நான்கு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் சரத்பவார் குடும்பத்தினர் யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கும் கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது