வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (15:23 IST)

நாளை புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வா? சோனியாவுக்கு எதிராக திரளும் 23 தலைவர்கள்

நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சோனியா காந்தி தற்போது இடைக்கால தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என சமீபத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பொறுப்பான தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என 23 மூத்த தலைவர்கள் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது 
 
அனேகமாக ஏகே ஆண்டனி, மல்லிகார்ஜுனையா அல்லது ப சிதம்பரம் ஆகிய மூவரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து மாநிலங்களில் தேர்தல் வந்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட ஒரு புதிய தலைவர் தேவை என்றும் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகிய இருவருமே கடந்த சில ஆண்டுகளாக கட்சியை சரியாக வழி நடத்தவில்லை என்றும் சீனியர் தலைவர்கள் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது