செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:10 IST)

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது: காங்கிரஸ் எம்பி அதிர்ச்சி தகவல்

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
இந்தியாவில் 6 விமான நிலையங்கள் அதானிக்கு விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இனிமேல் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போட்ஸ் ஆப் இந்தியா என்று மாற்ற வேண்டிய நிலை வரும் என காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் என்பவர் கூறியுள்ளார்
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ’முதலில் அகமதாபாத்,லக்னோ, மங்களூர் ஆகிய விமான நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
 
எனவே இனிமேல் இந்த 6 விமான நிலையங்களும் அதானி நிறுவனத்தின் கைக்கு வந்துவிடும். அதனால் இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போர்ட்ஸ் ஆப் இந்தியா என்று தான் மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
 
ஏற்கனவே விமான நிலையங்கள் தனியார் மயமாக மாற்றப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது