அதிகமாகவும் கேட்க மாட்டோம், குறைவாகவும் பெற மாட்டோம்: கூட்டணி குறித்து கே.எஸ்.அழகிரி

azhagiri
அதிகமாகவும் கேட்க மாட்டோம், குறைவாகவும் பெற மாட்டோம்
siva| Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (20:33 IST)
அதிகமாகவும் கேட்க மாட்டோம், குறைவாகவும் பெற மாட்டோம் என கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் இந்த முறை தரக்கூடாது என திமுக தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுக தலைவர் முக ஸ்டாலின் இம்முறை காங்கிரஸ்க்கு ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகள் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று கோவையில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து கூறிய போது ’நாங்கள் அதிகமாகவும் கேட்கமாட்டோம், குறைவாகவும் பெறமாட்டோம் தேவையானதை பெறுவதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் கொள்கை என்று கூறினார்
இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :