அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை: உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

udhayanidhi
அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
siva| Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:39 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் கைது செய்யவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சமீபத்தில் திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அனுமதி இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அதன் பின் மாலையே விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் தற்போது அவர் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மக்களை சந்திக்க சென்ற என்னை கைது செய்த தமிழக போலீஸ், அமித்ஷா நேற்று மக்களை சந்திக்க வந்தபோது ஏன் கைது செய்யவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வழக்கம்போல்

மோடி, அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தால் கொரோனா பரவாதா? திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா? என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :