செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:39 IST)

மு.க.ஸ்டாலின்தான் எங்க முதல்வர் வேட்பாளர்! – கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் எழுந்த நிலையில் திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

சமீபத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துகளால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அதிமுக கட்சி ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூற வேண்டாம் என கூட்டறிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து முக ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேசி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.