1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:26 IST)

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது பெரும் தவறு: முக ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நேரத்திலும் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. நீதிமன்ற அனுமதியுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன
 
இந்த நிலையில் வரும் 18ம் தேதி முதல் அதாவது நாளை முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் தனிமனித இடைவெளி ஆகிவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது 
 
சென்னையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு எடுத்த தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் உள்பட பலர் சென்னையில் டாஸ்மாக் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது பெரும் தவறு என்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு டாஸ்மாக்குக்கு பெரும்பங்கு உண்டு என்றும், யார் பாதிக்கப்பட்டாலும் வருமானம் வந்தால் சரி என்பது மனிதாபம் அற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
ஊரடங்கு நேரத்தில் டாஸ்மார்க் வேண்டாம் என்றும் கொரோனா வைரஸை மேலும் பெருகி விடக்கூடாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்