திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:35 IST)

தடை போட்டாலும் ஊர்வலம் நடத்தியே தீருவோம்! – விநாயகர் சிலையுடன் குவிந்த இந்து மக்கள் கட்சியினர்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையோடு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருவதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் அமைக்கவோ, ஊர்வலம் செல்லுதல், வழிபடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி சிந்தாமணி அருகே இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையை கொண்டு வந்து தடையை மீறி நடுரோட்டில் வைத்து வழிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைக்கவும், வழிபடவும் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தாலும், தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.