ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (12:34 IST)

கூட்டணியில இருந்தா ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு இல்லை; தமிழகத்தில் காமராஜர் ஆட்சி! – கே.எஸ்.அழகிரி உறுதி!

காமராஜர் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் தொண்டர்கள் உறுதியேற்க வேண்டுமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவருமான கர்மவீரர் காமராசரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும், அதை தவிர கீழான திட்டங்கள் எதுவும் இருக்க கூடாது. திமுக கூட்டணியில் உள்ளபோது எப்படி காங்கிரஸ் ஆட்சி என தொண்டர்கள் கேட்கலாம். கூட்டணியில் இருந்தால் ஆட்சிக்கு வரக்கூடாது என எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.