தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்திய கர்மவீரர்! – காமராஜர் பிறந்தநாளில் ஓபிஎஸ் மரியாதை!

Prasanth Karthick| Last Modified வியாழன், 15 ஜூலை 2021 (09:49 IST)
தமிழக முன்னாள் முதல்வரான காமராசரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அதிமுக இணை செயலாளர் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவருமான கர்மவீரர் காமராசரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக இணை செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் “மனித குலத்துக்கும், நாட்டிற்கும் அருந்தொண்டாற்றி இந்திய மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவரும், இளம் வயதிலிருந்தே நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும், தொண்டு என்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கியவரும், கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவரும், "கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவருமான, கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மரியாதை செலுத்தியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :