பெங்களூர் – சென்னை அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick| Last Updated: வியாழன், 15 ஜூலை 2021 (09:29 IST)
பயணிகள் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் – சென்னை விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் பயணிகள் குறைவாக பயணிக்கும் பெங்களூர் – சென்னை உள்ளிட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது பாதிப்புகள் குறைத்து பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பெங்களூர் – சென்னை இடையேயான சதாப்தி அதி விரைவு ரயில்கல் இரு மார்க்கமாகவும் ஜூலை 21 முதல் செயல்படும். அதேபோல உப்பள்ளி – சென்னை விரைவு ரயில்கள் 21 மற்றும் 22ம் தேதிகளில் இரு மார்க்கத்திலும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :