அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! – விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை!

Seeman Vijay
Prasanth Karthick| Last Modified வியாழன், 15 ஜூலை 2021 (11:19 IST)
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில் சீமான் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி கட்டியிருந்த நிலையில் மேலும் அனுமதி வரி கட்ட கூறிய நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.

மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் பேசி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! "ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி!” என்று ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :