1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (12:17 IST)

சாதி வாரி கணக்கெடுப்பு மக்களை பிளவுபடுத்தும் தவறான நடைமுறை: டாக்டர் கிருஷ்ணசாமி

krishnasamy
பாமக உள்பட பல கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் ஆதரிக்கவில்லை என்றும் மக்களை பிளவுபடுத்தும் ஒரு தவறான நடைமுறை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
இட ஒதுக்கீடு மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்க முடியாது என்றும் தூய்மையான அரசால் மட்டுமே எந்தவித பேதமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 
 
ஜாதிவாரி கணக்கெடுப்பு முறை நாட்டு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழக ஆதரிக்கவில்லை என்றும் இது மக்களை பிளவுபடுத்தக்கூடிய தவறான நடைமுறை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்து என்னாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran