வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (11:27 IST)

ஆம்னி பேருந்து கட்டண உயர்வை அரசு கண்காணிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை..!

ஆம்னி பேருந்து கட்டண உயர்வை அரசு கண்காணிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
மேலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர் மக்கள் இயக்கம் நடத்தி வருகிறோம் என்றும்,  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
 
மேலும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு கண்டனத்துக்குரியது என்றும், இதனை அரசு கண்காணித்து கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
மேலும் விடுமுறைக் காலங்களில், ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
Edited by Mahendran