1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Krishnasamy says about admk and bjp alliance

அதிமுக - பாஜக பிரிவு சரி செய்யப்படும்: டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை..!

krishnasamy
அதிமுக பாஜக கூட்டணி முறிவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறிவு சரி செய்யப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தர்வித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அதிமுகவின் சில தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்றதால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளது.
 
கூட்டணி அண்ணாமலை மட்டுமே காரணம் இல்லை. சிறிய விரிசல் பெரியதாகிவிட்டது. இதில் சரிசெய்ய முடியாத நிலை இல்லை. கூட்டணி தர்மத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். 
 
கூட்டணியில் இருந்து கொண்டு அதில் இருப்பவர்களை விமர்சிப்பது கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருந்தால் தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களை வெல்ல முடியும். இத்தகைய சூழலில் அதிமுக – பாஜக இடையே பிரிவு சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்.. ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு..!