ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (12:23 IST)

தெர்மாக்கோல் அமைச்சரை விமர்சித்த இளவரசி மகள்

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்து பேசியதற்கு, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார்.  கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான நிவாரண உதவியை கிருஷ்ணப்பிரியா அறக்கட்டளை செய்து வருகிறது.
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதத்தால் சிங்கபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறு வருகிறார். இதைப்பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து பேசியிருந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை விமர்சித்த கிருஷ்ணபிரியா, தெர்மகோல் புகழ் அமைச்சர் மனிதாபிமானம் மற்றும் அரசியல் நாகரிகத்தை இனியாவது கற்றுக்கொள்வது நல்லது என்றும் அரசியல்வாதிகள் மீது அரசியல்ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர அவரவர் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பது என்பது  நாகரிகமற்ற செயல் என்றும் கூறினார்.